ஆரம்பிச்சுட்டாங்கப்பா, இந்த மனித உரிமை மக்களும், தமிழ் தேசியத் தலைவர்களும்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில ஈடுபட்ட மூணு பேரு தூக்கு தண்டனை உறுதி செஞ்சது தப்பாம்.
நான் கேக்கறேன், ராஜீவை விட்டு தள்ளுங்க, அவர் நல்லவரா, கெட்டவரா, தமிழர்களுக்கு நல்லது பண்ணினாரானு எனக்குத் தெரிய வேண்டாம். ஆனா அவர் கூடவே இருந்த காவல் துறை அதிகாரிகளும் சில பொது மக்களும் செத்துப் போனாங்களே, அவங்க சாவுக்கு காரணமா இருந்தவங்க தண்டிக்கப் பட வேண்டுமா, வேண்டாமா?
தமிழ் தமிழ்னு பேசறீங்களே, இந்திராவைக் கொன்ற சீக்கியர்கள் இருக்கும் பஞ்சாப் போனபோதும் சரி, நக்சல் விளை நிலமா இருக்கும் வடகிழக்கு பகுதிக்கு போனபோதும் சரி, ராஜீவ் சாகலை, ஆனா அமைதிக்கு பேர் போன தமிழகத்துக்கு வந்தபோது கொல்லப்பட்டு தமிழ்நாட்டுக்கே கெட்ட பேர் வாங்கிக் கொடுத்த "போராளிகளுக்கு" விடுதலை வேணும்னு கேக்கறது உங்களுக்கே வெக்கமா இல்ல?
என்னைக் கேட்டா, நளினியை மன்னிச்சதே தப்பு. அவங்களை மன்னிக்கலாம்னு சோனியா மட்டும் சொன்னா போதுமா? கொல்லப்பட்ட மத்த ஆளுங்களோட உறவினர்களும் அதை சொல்ல வேணாமா?
என்னைப் பொறுத்தவரை, சக மனிதர்களைக் கொள்ளும் எவராக இருந்தாலும், அது ராஜபக்சேவா இருந்தாலும் சரி, வேற எந்த தீவிரவாதக் கூட்டமா இருந்தாலும் சரி, அவர்களை மன்னிப்பது கூட ஒரு வித கொலைதான்.
மன்னிப்பாம், விடுதலையாம், போங்கப்பா, புள்ள குட்டிங்கள படிக்க வைங்க.
No comments:
Post a Comment