Monday, October 17, 2011

தமிழ்மணம்-உண்மைய சொன்னா கசக்கிறதா?

தமிழ்மணம் என்றொரு திரட்டி இருப்பது எல்லாருக்கும் தெரிந்ததே. ஆனால் அதில் ஒரு புல்லுருவி இருப்பது இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. 

பன்னிகுட்டி என்றொரு பதிவர் இவரு ஒரு பய(ங்கர)டேட்டா போட்டாரு. அது சந்தேகமில்லாமல் நகைசுவையாதான் இருந்தது. ஆனாலும் ஒருத்தருக்கு மட்டும் அதில இருந்த ஒன்னு குத்தியிருக்குது. என்ன செய்ய, ஒரு வேளை உண்மைய சொன்னதால மனசாட்சி உருதிடுச்சு, போல!
நாட்டில ஆயிரக்கணக்கான பதிவர்கள் இருக்காங்க. அவங்க போடற எல்லா பதிவுகளும் நமக்கு புடிச்ச மாதிரிதான் இருக்கணும்னு இல்ல. உங்களுக்கு பிடிக்காத பதிவா இருந்துச்சுன்னா என்ன செய்யணும்? ஒன்னு, அதைப் பத்தி கவலைப் படாம நீங்க பாட்டுக்கு போகணும், இல்லை அங்க போயி உங்க கருத்தை எழுதிட்டு வரணும், அதுவும் இல்லைனா நீங்க ஒரு எதிர் பதிவு எழுதிட்டு போய்கிட்டே இருக்கணும். இந்த பெயரிலின்னு ஒருத்தர் என்ன பண்றாருன்னா, பன்னிகுட்டி பதிவுல போயி ஒரு கமென்ட் போட்டாரு. தன்னோட பேரை எப்படி போட்டாரு, தெரியுமா? 
On behalf of tamilmanam
-/tramanitharan, k.

(-/பெயரிலி.)

இப்படி ஒரு பேர்ல வந்து கமென்ட் போட்டா என்ன பொருள்? இந்த கமெண்ட்டுக்கு தமிழ்மணம் பொறுப்பாகுமா இல்லையா? இவரு எப்படி எல்லாம் கமென்ட் போட்டாரு தெரியுமா? அது இந்த பதிவுல போட்டு என் பதிவை நாறடிக்க விரும்பலை. ஆனா,ஒன்னு, நல்ல மனசு உள்ளவங்க அந்த மாதிரி கமென்ட் போட மாட்டாங்க. ஆனாலும் கும்மி க்ரூப்ல இருந்தவங்க நாகரிகமாதான் பதில் சொன்னாங்க. 

இதோட இருந்தா பரவாயில்லை,அந்த பதிவுல யாருலாம் தமிழ்மணத்தை எதிர்த்து எழுதினாங்களோ, அவங்களை எல்லாம் தமிழ்மணம் திரட்டியிலிருந்து தூக்கி எரிஞ்சதா மெயில் அனுப்பினாங்க. சில தன்மானமுள்ள பதிவர்கள் தாங்களாவே அந்தத் திரட்டில இருந்து வெளியேறினாங்க.  

இந்த நேரத்துல களத்துல குதிச்சாரு, ஒரு சொம்பு தூக்கி. அவரு என்ன பண்ணினாரு, "யப்பா எல்லாரும் வாங்க, உக்காந்து பேசி ஒரு முடிவு எடுக்கலாம்"னு ஒரு பதிவு போட்டாரு. அங்க கூட கும்மி க்ரூப் ஆளுங்க டீசெண்டா கமென்ட் போட்டு தங்கள் கருத்தை தெரிவிச்சாங்க. அதுக்கப்புறம் சொம்பு தூக்கி ஒரு பதிவு போட்டாரு, பாருங்க, த்தூ...........கேவலம். இவரு மத்தவங்களை பார்த்து இதான் வீரமான்னு கேக்கறாரு.  வாங்க பேசலாம்னு ரெண்டு க்ரூப்பைக் கூப்பிட்டு அப்புறமா ஒருதலை பட்சமா பதிவு எழுதறாரே, இவரு வீரத்தைப் பத்தி பேசலாமா?

ஒரு உண்மை தமிழ்மணம் ஆளுங்களுக்கு புரியலை போலிருக்கு, "பதிவர்களை நம்பித் தான் திரட்டியே தவிர, திரட்டியை நம்பி பதிவர்கள் இல்லை"

சூடு சொரணை மானம் உள்ளவன் தமிழ்மணம் பக்கம் போக மாட்டான்.
எனக்கு இது எல்லாமே இருக்கு.

ஸோ, பை, பை, தமிழ்மணம்! 

14 comments:

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

"மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!"

////ஒரு உண்மை தமிழ்மணம் ஆளுங்களுக்கு புரியலை போலிருக்கு, "பதிவர்களை நம்பித் தான் திரட்டியே தவிர, திரட்டியை நம்பி பதிவர்கள் இல்லை"

சூடு சொரணை மானம் உள்ளவன் தமிழ்மணம் பக்கம் போக மாட்டான்.
எனக்கு இது எல்லாமே இருக்கு.

ஸோ, பை, பை, தமிழ்மணம்! ////

வழிமொழிகிறேன் சகோ.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல முடிவு நண்பரே

சிகப்பு கடல் said...

உண்மையிலேயே சகோ. ரமேஷ் ரொம்ப ரொம்ப நல்லவந்தான்.

வெளங்காதவன் said...

நல்லது!

பெசொவி said...

Yes, I agree with your views!

வெங்கட் said...

// ஸோ, பை, பை, தமிழ்மணம்! //

சபாஷ்..!! நெத்தியடி..!

UNMAIKAL said...

Click the link below and read.

1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


3.
தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

5.
தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!


6.
தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?


7.
தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..


8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க

9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்
15.தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!

16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?

17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...

19. தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்

20. தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!

21. யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை

22. பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

23. தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?


24. சீ தமிழ் மனமே .......

25. தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ?

26. மண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்

27. தமிழ்மணம்-உண்மைய சொன்னா கசக்கிறதா?

Jaleela Kamal said...

//ஒரு உண்மை தமிழ்மணம் ஆளுங்களுக்கு புரியலை போலிருக்கு, "பதிவர்களை நம்பித் தான் திரட்டியே தவிர, திரட்டியை நம்பி பதிவர்கள் இல்லை"//


அதானே

"என் ராஜபாட்டை"- ராஜா said...

You said very correct. . I will remove Tamilmanam vote label tomorrow

Zero to Infinity said...

http://www.etisalat.ae/index.jsp?type=proxy

is the place where you can recommend ETISAT to block Tamilmanam in UAE. I already submitted the request.

Yoga.S.FR said...

சூடு சொரணை மானம் உள்ளவன் தமிழ்மணம் பக்கம் போக மாட்டான்.
எனக்கு இது எல்லாமே இருக்கு.///well said!!!

J.P Josephine Baba said...

Nice!

sulthan said...

ஸலாம்
உங்கள பார்த்து எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு பா . மார்க்க விசயத்துல கலக்குறீங்க பா .
பொறமை படலாம்ல..........


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக்கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்: இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக்கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அஸ்வுத் (ரழி) ஆதாரம்: புஹாரி 73

Ramesh Ramar said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil Newspaper